
வேலூர் மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு
வேலூர் மாவட்டத்தில், சம்பா பருவ நெற்பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொதுத்துறை வங்கிகள், அரசு பொது சேவை மையங்களை அணுகி, ஒரு ஏக்கருக்கு ₹544 பிரீமியம் செலுத்தி, வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
































