அரக்கோணம் அருகே தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை

85பார்த்தது
அரக்கோணம் அருகே தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை
அரக்கோணம் அடுத்த மின்னல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் ஜெயபிரகாஷ் (வயது 25). இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். ஜெயபிரகாஷ் கடந்த சில நாட்களாக வீட்டில் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதனை கண்ட வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெயபிரகாஷை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி