அரக்கோணம்: தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி பலி

75பார்த்தது
அரக்கோணம்: தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி பலி
திருத்தணி தாலுகா பெரிய கடம்பூர் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி ராணி (வயது 70). இவர் திருத்தணி-அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் அரக்கோணம் வடக்கு கேபின் பகுதியில் ரயில் பாதை தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி