ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று (மே 22), மேல்பாக்கத்தைச் சேர்ந்த சித்ரா என்ற பெண் தீக்குளிக்க முயன்றார், எதிர்வீட்டுக்காரர் கழிவுநீரை தெருவில் விடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அலுவலர்கள் அவரை சமாதானப்படுத்தி கோட்டாட்சியர் ரமேஷிடம் அழைத்துச் சென்றனர். இது குறித்து அவரிடம் புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.