ராணிப்பேட்டை: வட மாம்பாக்கம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

832பார்த்தது
ராணிப்பேட்டை: வட மாம்பாக்கம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் வட மாம்பாக்கம் ஏரியில் நேற்று, 18 ஆம் தேதி, திடீரென மீன்கள் செத்து மிதந்தன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி குறித்து கிராம மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்கள், மீன்கள் மர்மமான முறையில் இறந்ததை உறுதி செய்தனர். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் ஏதேனும் மருந்து கலக்கப்பட்டதா என போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி