அரக்கோணம் ரயிலில் போதை மாத்திரை கடத்தல் -3 பேர் கைது

7பார்த்தது
அரக்கோணம் ரயிலில் போதை மாத்திரை கடத்தல் -3 பேர் கைது
மும்பையில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று மார்ச் 2ம் தேதி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி, சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த ஆகாஷ், மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் பில்லாந்தாங்கலைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரிடமிருந்து 2,610 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக மூவரும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி