அரக்கோணம் டவுன், தக்கோலம், நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் கடந்த சில ஆண்டுகளாக பறிமுதல் செய்த சுமார் 7 டன் குட்கா, கூலிப்பொருட்கள் நீதிமன்ற உத்தரவின்படி அழிக்கப்பட்டன. தக்கோலம் பேரூராட்சிக்கு உட்பட்ட திடக்கழிவு மேலாண்மை மையத்தில், போலீசார் மேற்பார்வையில் பேரூராட்சி ஊழியர்கள் பள்ளம் தோண்டி அதில் குட்கா பொருட்களை கொட்டி அழித்தனர்.