ராணிப்பேட்டை மாவட்டம் மோசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே இன்று (ஜனவரி 11) ரயில் மோதி ஆண் ஒருவர் உயிரிழந்து கிடந்ததாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இறந்தவர் யார், அவரது சொந்த ஊர் எது, அவர் ரயில் மோதி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.