மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கும், 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டம் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அமைச்சர் காந்தி அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டம் பா. ஜனதா அரசையும், அதனை ஆதரிக்கும் அ. தி. மு. க. வையும் கண்டித்து நடத்தப்படுகிறது.