அரக்கோணம் அரசு மருத்துவமனையில் திருட்டு-போலீஸ் விசாரணை!

70பார்த்தது
அரக்கோணம் அரசு மருத்துவமனையில் திருட்டு-போலீஸ் விசாரணை!
அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில் உள் நோயாளிகளிடம் இரவு நேரங்களில் செல்போன் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்தன. இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில், நேற்று இரவு நோயாளி ஒருவரிடம் செல்போன் திருடிய மாரியப்பன் (45) என்பவர் கையும் களவுமாக பிடிபட்டார். அவரை டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி