
மதுராந்தகம், அரக்கோணம் தொகுதிகளில் சகோதரிகள் போட்டி
செங்கல்பட்டு மாவட்டம் இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ஒன்றிய அமைச்சர் தலித் எழில்மலை. இவரது மகள் எழில் கரோலின் வழக்கறிஞர் விசிக சார்பில் அரக்கோணத்தில் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது சகோதரி கேத்ரினா மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். ஒரே தேர்தலில் சகோதரிகள் இருவரும் களமிறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





























