அரக்கோணம் சாஸ்திரி நகரைச் சேர்ந்த டூவீலர் மெக்கானிக் ஜெயக்குமார் வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பீரோவை உடைத்து அதிலிருந்த 25 சவரன் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசில் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.