வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் நேற்று விருபாட்சிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிபாபு (52), பாலகுமார் (55), சரவணன் (54) மற்றும் வெட்டுவாணத்தைச் சேர்ந்த வேல்முருகன் (52) ஆகியோர் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 4 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.