ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பைபாஸ் சாலை அருகே பாஜக மாவட்ட தலைவர் பயணித்த கார் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.