ராணிப்பேட்டை அருகே கல்லூரி மாணவி மின்னல் தாக்கி பலி

0பார்த்தது
ராணிப்பேட்டை அருகே கல்லூரி மாணவி மின்னல் தாக்கி பலி
ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளூர் ஊராட்சி ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி தர்ஷினி, நேற்று (ஏப். 8) வீட்டின் அருகே நின்றபோது திடீரென வீசிய பலத்த காற்றுடன் கூடிய இடி, மின்னல் தாக்கியதில் சுருண்டு விழுந்தார். அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.

தொடர்புடைய செய்தி