ரத்தினகிரி அருகே குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி

உத்ரபிரதேசம் லக்னோ கந்தார் ஸ்லோன் பகுதியைச் சேர்ந்த அபா ஜித் சிங் (வயது 23) என்பவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 6-ந் தேதி காலை கல்லூரி விடுதியில் இருந்து வெளியே சென்றவர் திரும்ப வரவில்லை. இதனால் விடுதி வார்டன் தினேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அபாஜித்சிங் செல்போன் சிக்னல் ரத்தினகிரி காவல் நிலைய பகுதியில் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அரப்பாக்கம் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி குட்டையில் அபாஜித்சிங் பிணமாக கிடந்தார்.
அவர் குளிக்க வந்தபோது, கால் தவறி குட்டையில் விழுந்து இறந்திருக்கலாம் என்றும், அவர் அணிந்திருந்த உடைகள், ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் குட்டையின் அருகே இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரத்தினகிரி போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.