ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் இன்று பிப்ரவரி 12ம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் ஜனார்த்தனன், நகர வர்த்தக அணி தலைவர் ராகேஷ் ஜெயின், பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததையும், 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்காததையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.