வேலூர்: இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி; 15 வயது சிறுவன் மீது வழக்கு

74பார்த்தது
வேலூர்:  இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி; 15 வயது சிறுவன் மீது வழக்கு
கலவை ஒத்தவாடை தெருவை சேர்ந்த அர்ஜுனன் மனைவி அன்னக்கிளி (வயது 75). இவர் கலவை பஜார் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பும் வழியில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அன்னக்கிளி உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கலவை பள்ளிகாலனி ஒத்தவாடை தெருவை சேர்ந்த 15 வயது சிறுவன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி