வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பீஞ்சமந்தை தொங்குமலையை சேர்ந்த விவசாயிகளான அண்ணாமலை (40) மற்றும் வேலு (38) ஆகிய அண்ணன் தம்பிகளுக்கு இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. இதில், வேலு மறைத்து வைத்திருந்த கத்தியால் அண்ணன் அண்ணாமலையை சரமாரியாக வெட்டியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை அளித்த புகாரின் பேரில், வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து வேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.