ராணிப்பேட்டை அருகே தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து எசையனூருக்கு இன்று சென்ற அரசு டவுன் பேருந்து, சக்கரமல்லூர் அண்ணா நகர் அருகே சென்றபோது இன்ஜினில் இருந்து புகை வந்து தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் உடனடியாக கீழே இறக்கப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.