நெமிலி: சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த ஊராட்சி மன்றதலைவர்

56பார்த்தது
நெமிலி: சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த ஊராட்சி மன்றதலைவர்
நெமிலி ஊராட்சி ஒன்றியம், வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் உள்ள பஜனை கோவில் தெருவில், சாலை குண்டும், குழியுமாகவும், மழைகாலத்தில் மழை நீர் தேங்கி, சேறும் சகதியுமாகவும் காணப்பட்டது. 

இதனால் அவதிப்பட்ட அப்பகுதி பொது மக்கள் புதிய சாலை அமைத்துத்தர வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். அதன்பேரில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில், புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணியை, ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். 

மேலும் தரமாகவும், விரைவாகவும் சாலை அமைக்க ஒப்பந்ததாரிடம் கேட்டுக்கொண்டார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் உமா, துணைத்தலைவர் தணிகைமலை, ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜெயம்மாள் செல்லப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி