ராணிப்பேட்டை அடுத்த அசநெல்லிகுப்பத்தில், கீழ் வெங்கடாபுரத்தைச் சேர்ந்த தக்காளி (45) என்ற விவசாயி பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.