திமிரி: போலி மருத்துவ காப்பீடு அட்டை வழங்கி மோசடி

4பார்த்தது
திமிரி: போலி மருத்துவ காப்பீடு அட்டை வழங்கி மோசடி
திமிரி ஒன்றியத்தில் மத்திய அரசின் ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீடு அட்டை வழங்குவதாகக் கூறி, 5 பேர் ஊராட்சி மன்றத் தலைவரை அணுகி, பின்னர் மக்களிடம் ஆதார் அட்டை, ரூ. 100 பெற்றுக்கொண்டு போலியான காப்பீடு அட்டைகளை வழங்கியுள்ளனர். சந்தேகமடைந்த ஒருவர் ஸ்கேன் செய்து பார்த்தபோது மோசடி அம்பலமானது. இதையடுத்து, மக்கள் 2 பேரை திமிரி போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.