வேலூர்: விஜய்க்கு காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் பதிலடி!

120பார்த்தது
காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், கொடநாடு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்தார். "என்ன பூச்சாண்டி காட்டினாலும் நான் அஞ்ச மாட்டேன்" என இபிஎஸ் கூறியது குறித்து கேட்டபோது, "அவருடைய நிலைமையை அவர் தெரிவிக்கிறார் ஆனால் சட்டம் என்ன சொல்கிறதோ அதை தமிழக அரசு செய்யும்" என தெரிவித்தார். முதல்வர் மனிதாபிமானம் இன்றி அரசியல் ஆதாயம் தேடுவதாக தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து கேட்டபோது, "கரூர் சம்பவத்தில் 41 பேர் இறப்பிற்கு காரணமாக இருந்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களை பார்க்காமல் ஆறுதல் சொல்லாமல் இருந்த அவர் மனிதாபிமானம் உள்ளவரா?" என கேள்வி எழுப்பினார். 2026 தேர்தலில் திமுகவிற்கு நாட்கள் எண்ணப்பட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் நைனா நாகேந்திரன் கூறியது குறித்து கேட்டபோது, "அவர் பாவம் நல்ல மனிதர், அங்கு சொல்லிக் கொடுப்பதை சொல்லிவிடுவார் அவ்வளவுதான்" என்றார். செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியது குறித்து கேட்டபோது, "கட்சி விவகாரம், ஏன் அப்படி முடிவெடுத்தார் என்று இபிஎஸ்-க்கு தான் தெரியும்" என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி