காவேரிப்பாக்கம் அருகே விஷப்பூச்சி கடித்து பெண் பலி

68பார்த்தது
காவேரிப்பாக்கம் அருகே விஷப்பூச்சி கடித்து பெண் பலி
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த சங்கரன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 55). இவர், கடந்த 9-ந்தேதி அன்று இவரது நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது விஷப்பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you