கலவை அடுத்த வேம்பி கிராமத்தைச் சேர்ந்த மாம்பாக்கம் வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளரான சத்தியபிரியா (48), நேற்று இரவு பணியை முடித்துவிட்டு சக ஊழியருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கணியந்தாங்கல் அருகே பூனை குறுக்கே வந்ததால் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், சத்தியபிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற ஊழியருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த கலவை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.