ஆற்காடு அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

62பார்த்தது
ஆற்காடு அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
ஆற்காடு அருகே கீழ்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தரசு (வயது 32). இவர் வேலையில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.