ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் இன்று ஏப்ரல் 8ம் தேதி, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வேலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரு வாலிபர்கள் மீது அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதியதில், ஒருவர் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.