திருப்பத்தூர் அடுத்த கூடப்பட்டு பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் மௌனிஷ், நேற்று இரவு தனது சகோதரிகள் மற்றும் தாத்தாவுடன் இருசக்கர வாகனத்தில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து கூடப்பட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஜோலார்பேட்டை பேருந்து நிலையம் அருகே தீலிப் என்ற 17 வயது சிறுவன் ஓட்டி வந்த கார், அவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இந்த கோர விபத்தில் மௌனிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.