குடியாத்தம் புதிய பைபாஸ் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் போலீசார், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (21) மற்றும் பிரதாப் (21) ஆகிய இருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். அவர்களைக் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.