கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 7 சவரன் நகை பறிப்பு

0பார்த்தது
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 7 சவரன் நகை பறிப்பு
குன்றத்துார் அடுத்த மாங்காடு, ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த அஞ்சலை (48), திருநெல்வேலிக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வந்துள்ளார். அங்கு, அய்யஞ்சேரி சாலையில் தேநீர் கடை முன் அமர்ந்திருந்தபோது, போதை நபர் ஒருவர் கழுத்திலிருந்த 7 சவரன் தங்க சங்கிலியை பறித்து தப்பிக்க முயன்றுள்ளார். அஞ்சலையின் சத்தத்தால் ஓடிவந்த பொதுமக்கள் போதை நபரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர் ஊரப்பாக்கம் சேர்ந்த செல்வகுமார் (43) என தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி