அரக்கோணம் அடுத்த காட்டுப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ஜோதி (57) என்பவர் நேற்று நிலத்திற்கு நடந்து சென்றபோது, திடீரென பெய்த பலத்த மழை, இடி, மின்னலின் போது மின்னல் தாக்கி மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.