திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட, நாட்றம்பள்ளியில் வட்டாச்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்த நபர்களை கே.சி. வீரமணி ஆதரவாளர்கள் தாக்கியதாக புகார் எழுந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி உட்பட 50 பேர் மீது நாட்றம்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.