திருப்பத்தூர்: ஆட்சி மொழி விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த ஆட்சியர்

80பார்த்தது
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இருந்து தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்ற தமிழே ஆட்சி மொழி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களுக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

தொடர்புடைய செய்தி