அணைக்கட்டு தாலுக்கா, சத்தியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட இராமாபுரம் கிராமத்தில் கனமழை பெய்தபோது, வீட்டின் அருகே பசு மாட்டை கொட்டகையில் கட்டச் சென்ற 18 வயது கல்லூரி மாணவன் ஜீவித் மின்னல் தாக்கி விழுந்தார் . பெற்றோர் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். விரிஞ்சிபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.