வேலூரில் மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார்

233பார்த்தது
வேலூரில் மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார்
வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாபுவை, கடந்த 2 நாட்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த 3 பேர் கஞ்சா போதையில் பணம் கேட்டு மிரட்டி தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பாபு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாபுவின் தாய் ராணி நேற்று வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.