திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பெரிய மோட்டூர் பேருந்து நிறுத்தத்தில், ஆம்பூர் பணிமனையின் அரசு பேருந்து பயணிகளை இறக்கிவிட்டு வாணியம்பாடி நோக்கி புறப்பட தயாராக இருந்தபோது, அடையாளம் தெரியாத இருவர் பேருந்தின் பின்பக்க கண்ணாடியின் மீது கல்வீசி எறிந்தனர். இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.