திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் ஏரியில் தமிழக அரசின் அனுமதியின்றி மண் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஜோலார்பேட்டை போலீசார், மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்து, தப்பியோடிய ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.