ஜோலார்பேட்டை: வரதட்சனை கொடுமையால் பெண் தற்கொலை.. 3 பேர் கைது

1பார்த்தது
ஜோலார்பேட்டை: வரதட்சனை கொடுமையால் பெண் தற்கொலை.. 3 பேர் கைது
ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூர் பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவரை ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்ட தீபிகா (23), திருமணமான ஒரு வாரத்திலேயே வரதட்சணையாக பணம், நகை கேட்டு கணவர், மாமனார், மாமியார் ஆகியோரால் கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தாய் வீட்டில் இருந்த தீபிகா, வரதட்சணை கொடுமையால் மனமுடைந்து 3 நாட்களுக்கு முன்பு தாய் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீபிகாவின் கணவர் வல்லரசு, மாமனார் விநாயகம், மாமியார் சித்ரா ஆகியோரைக் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி