ஏலகிரி மலையில் பாலியல் தொழில் அதிரடி காட்டிய புதிய டிஎஸ்பி ஜெகநாதன் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை சுற்றுலாத்தலத்திற்கு புகழ் பெற்ற இடமாகும். இங்கு சென்னை, பெங்களூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் ஏலகிரி மலையில் உள்ள தங்கும் விடுதிகளில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக திருப்பத்தூர் எஸ் பி ஸ்ரேயா கோத்தா அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் திருப்பத்தூர் டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையிலான போலீசார் சனி மற்றும் ஞாயிறு என இரு தினங்களாக விடிய விடிய சந்தேகத்திற்கிடமான தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனைகள் ஈடுபட்டனர்.
அப்போது ஞாயிற்றுக்கிழமை நேற்று காலை 7 மணி அளவில் பாலியல் தொழில் ஈடுபட்டதாக தங்கும் விடுதி மேலாளர் இடைத்தரகர் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பாலியல் தொழில் ஈடுபட்ட 10 பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் இதுகுறித்து ஏலகிரி மலை காவல் நிலையத்தில் 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.