திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை அருகே நேற்று மாலை 6 மணியளவில் அதிவேகமாக வந்த பிக்கப் வாகனமும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில், திருப்பத்தூர் மசூதி கோட்டை தெருவைச் சேர்ந்த சைபுல்லா அஸ்ரப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து கந்திலி போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.