ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப்பை கடந்த 22ம் தேதி நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் தீ வைத்து எரித்தார். ராணிப்பேட்டை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் கடந்த 2 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. நீதிபதியின் உத்தரவின் பேரில், அவர் நேற்று சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.