ராணிப்பேட்டை: திறப்பு விழாவில் கார் ஓட்டிய முதல்வர்

490பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனங்களின் புதிய கார் தொழிற்சாலையை திறந்து வைத்தார். இந்த ரூ. 9,000 கோடி திட்டத்தின் மூலம் ஜாகுவார் லேண்ட் ரோவரின் ஆடம்பர மாடல்கள் மற்றும் மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாலின் டாடா கார் தொழிற்சாலையில் ரேஞ்ச் ரோவர் காரையும் இயக்கிப் பார்த்தார்.

தொடர்புடைய செய்தி