காட்பாடி பிரம்மபுரம் அடுத்த அரும்பருத்தி பகுதியில், தாய் கண்டித்ததால் 10ஆம் வகுப்பு மாணவர் கிருஷ்ணா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து வந்த மகனை ரேஷன் கடைக்கு வருமாறு தாய் தரணி அழைத்துள்ளார். மகன் மறுத்ததால் கண்டித்த தாய், ரேஷன் கடைக்கு சென்று திரும்பியபோது, கிருஷ்ணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.