கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிணி (24) என்பவர், கூகுள் மேப் ரிவ்யூ செய்தால் அதிக கமிஷன் கிடைக்கும் என வந்த குறுஞ்செய்தியை நம்பி, 'அட்லிப்ட் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் செயல்பட்ட மர்ம நபரிடம் 25.53 லட்சம் ரூபாயை முதலீடு செய்து ஏமாந்துள்ளார். போலியான வங்கி கணக்கு விவரங்களை அனுப்பி லாபம் கிடைத்ததாக காட்டி, பணத்தை எடுக்க விடாமல் செய்த மர்ம நபரால் பாதிக்கப்பட்ட ஹரிணி, வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.