ராணிப்பேட்டை அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

865பார்த்தது
ராணிப்பேட்டை அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
ராணிப்பேட்டை மாவட்டம் சயனபுரம் ரோட்டு தெருவைச் சேர்ந்த 21 வயதான புவனேஸ்வரி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். புவனேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி