பேரணாம்பட்டு வனச்சரகத்திற்குட்பட்ட கலர்பாளையம் வனப்பகுதியில், வனச்சரகர் மோகன்வேல் தலைமையில் வனவர்கள் மற்றும் வன காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சம்பத் (65) மற்றும் அவரது மகன்கள் காசி (35), ராஜா (30) ஆகிய மூவரும் குட்டையில் இறந்த பன்றியை வெட்டிக் கொண்டிருந்தனர். வனத்துறையினர் அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, வனத்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, தலா ரூ. 10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.