காட்பாடி காவல் நிலையம் அருகே பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் உள்ள போலீஸ் குடியிருப்பில் வட மாநில வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இறந்தவர் யார், எங்கிருந்து வந்தார், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.