வேலூர்: குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

78பார்த்தது
வேலூர்: குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் தீபக் (வயது 14). இவர் நண்பர்களுடன் வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலை கோவில் திருவிழாவை காண வந்தார். இந்த நிலையில் நேற்று (மார்ச் 14) கோவில் அருகில் உள்ள சரவணபொய்கை குளத்தில் தீபக் மற்றும் நண்பர்கள் குளித்தனர். அப்போது நீச்சல் தெரியாத தீபக் குளத்தில் உள்ள தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் தீபக்கின் நண்பர்கள் மேல்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பொன்னை இன்ஸ்பெக்டர் கருணா தலைமையில் போலீசார் விரைந்து சென்று தீபக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி