வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவக்குமார் என்ற கைதி டி.ஐ.ஜி. வீட்டில் வேலை பார்க்கும் போது தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயில் கைதிகளை சிறை அதிகாரிகள் தங்களது வீடுகளில் வேலை பார்ப்பதற்கு பயன்படுத்தக் கூடாது என ஏற்கனவே விதிமுறைகள் உள்ளன. இந்த நிலையில் வேலூர் மத்திய சிறையில் வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திடீர் ஆய்வு செய்தனர். சிறை கைதிகள் விதிகளை மீறி வீட்டு வேலைக்கு பயன்படுத்தப்படுகிறார்களா? என ஆய்வு செய்யப்பட்டதாகவும், வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.